நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர், இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துவருகிறார், இப்படத்திற்காக செம பிட்டாக மாறியுள்ளார் சிம்பு.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம ட்ரெண்டானது, மேலும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீண்ட நாட்களாக நடிகர் சிம்புவை பழைய தோற்றத்தில் பார்க்க ஆசைப்பட்டு கொண்டிருந்த அவரின் ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் வகையில், தனது உடலில் உள்ள 30 கிலோ வரையிலான எடையை குறைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு நிஜமான பாம்பை பிடித்து பையில் போடுகிறார். மேலும் அவருடன் காமெடி நடிகர் பாலா சரவணனும் உள்ளார்.
மோஷன் போஸ்டரில் பாம்பை காண்பித்த நிலையில், தற்போது நிஜமான பாம்பையே சிம்பு பிடிக்கும் வீடியோவை கண்ட ரசிகர்கள் இணையத்தில் பரப்பை வருகினற்னர்.







