பிக்பாஸ் 4வது சீசன் கடந்த அக்டோபர் 4ம் தேதி தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் டுவிஸ்டாக வைத்து வருகிறார்.
கொஞ்சம் பிக்பாஸ் வீட்டில் கொண்டாட்டம் வந்துவிட்டால் போதும் உடனே அதை கெடுத்துவிடுகிறார் பிக்பாஸ். இப்போதும் அப்படி தான் சில சண்டைகள் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் புதிய போட்டியாளர் குறித்த தகவல் வந்துள்ளது. பகல் நிலவு சீரியலில் ஷிவானியுடன் இணைந்து நடித்திருந்த அசீம் புதிய போட்டியாளராக நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.
ஷிவாணி மற்றும் அசீம் இருவரும் காதலிப்பதாக ஏற்கெனவே கிசுகிசுக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.







