பிக் பாஸ் 4 வீட்டிற்குள் இருந்து சென்ற வாரம் 2வது போட்டியாளராக மக்கள் ஓட்டு குறைவாக பெற்ற காரணத்தினால் வேல் முருகன் வெளியேறினார்.
வீட்டை விட்டு வெளியேறிய வேல் முருகன், பிக் பாஸ் வீட்டிற்குள் தனக்கு என்ன நடந்தது, போட்டியாளர்கள் ஏன் என்ன ஒதுக்கினார்கள் என கூறிவந்தார்.
அப்போது வேல் முருகனிடம், ” பிக் பாஸ் வீட்டிற்குள் யார் கமல் ஹாசன் சார் முன் பச்சையாக நடிக்கிறார் ” என்று கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளித்த வேல் முருகன் ” பிக் பாஸ் வீட்டிற்குள் மக்களுக்காகவும், கமல் ஹாசன் சார் முன் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்று பச்சையாக நடிப்பது ரம்யா பாண்டியன் தான் ” என கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி சுரேஷ் சக்ரவதியும் அப்படிதான், ஆனால் அவர் சொல்லிவிட்டு தான் கொளுத்தி போடுவார். என்று வெளிப்படையாக கூறியுள்ளார் வேல் முருகன்.







