தமிழில் வெளிவரும் சில திரைப்படங்களில், முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா என பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
ஆனால் விஜய் தொலைக்காட்சியில் சென்ற வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தன்னை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி கொண்டார் சாக்ஷி.
இந்த நிகழ்ச்சியில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை மற்றும் அதிக ஓட்டுகள் பெற தவறியதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
தற்போது கதாநாயகியாகவே சில படங்களில் நடித்து வருகிறார். ஆம் தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்க சாக்ஷி ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்நிலையில் நம் சினிஉலகத்தின் சேனலுக்கு பேட்டி அளித்த சாக்ஷி அகர்வால் பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அதிலும் தனது கல்லூரி பருவத்தில் தன்னுடைய சீனியர் ஒருவரை 3 வருடம் காதலித்து வந்ததாக கூறியுள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்களாம்.
மேலும் அவரை கூறியதை தெரிந்துகொள்ள, இந்த வீடியோ முழுமையாக பாருங்கள்..







