சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பணம் மோசடி – தலைவர் ரவி வர்மா பதவியில் இருந்து நீக்கம்

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பணம் கையாடல் செய்ததாக கூறி, சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவி வர்மா, தலைவர், அடிப்படை உறுப்பினர் உட்பட பதவிகளில் இருந்து நீக்கம்.

சென்னை செப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த துணை தலைவர் நடிகர் மனோபாலா மற்றும் ரிஷி ஆகியோர், மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ரவி வர்மா பணம் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வழங்கிய நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவிகள் எதுவும் சங்க உறுப்பினர்களுக்கு கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.