மலையாள திரையுலகை சேர்ந்தவர் பழம்பெரும் நடிகை சாரதா நாயர். இவர் மலையாளத்தில் வெளியான பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
குறிப்பாக நடிகர், நடிகைகளின் பாட்டியாக இவர் நடித்த படங்கள் மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.
இந்நிலையில் 92 வயதான மூத்த நடிகை சாரதா நாயர், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார்.
இவரது மறைவுக்கு மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ശാരദ അമ്മയ്ക്ക് ആദരാഞ്ജലികൾ pic.twitter.com/6kMernXTsl
— Mohanlal (@Mohanlal) September 29, 2020







