மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜி பற்றி நமக்கு தெரியாத விஷயத்தை பகிர்ந்த தொகுப்பாளினி ரம்யா

கடந்த செப்டம்பர் 10ம் தேதி சினிமா துறையில் ஒரு சோகம் நிகழ்ந்தது. தொலைக்காட்சி காமெடி பிரபலம் வடிவேலு பாலாஜி பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

அவரின் மறைவை யாராலும் இன்னும் மறக்க முடியவில்லை, எல்லோரிடமும் மிகவும் சாதாரணமாக பழகக் கூடியவர்.

அவரை பற்றி பல பிரபலங்கள் தங்களது நியாபகங்களை பகிர்ந்த நிலையில் தொகுப்பாளினி ரம்யா இப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், வடிவேலு பாலாஜியின் முதல் ஷோவை நான் தான் தொகுத்து வழங்கினேன். முதலில் அவரை பார்த்ததும் வடிவேலு அவர்கள் தானோ என்று தான் நினைத்தேன், அப்படியே இருந்தார். அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர் வடிவேலு பாலாஜி என பல விஷயங்கள் கூறியுள்ளார்.