நேர்கொண்ட பார்வை வித்யா பாலன் தானா இது?

நேர்கொண்ட பார்வை படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்த அஜித்துக்கு மனைவியாக நடித்தவர் வித்யா பாலன். ஹிந்தி சினிமாவை சேர்ந்த இவர் முக்கியத்துவமான கதைகளையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஹிந்தி அக்‌ஷய் குமாருடன் Mission Mangal படத்தில் நடித்திருந்தார். Dirty Picture படத்திற்காக தேசிய விருதும் வாங்கியிருந்தார்.

கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்திருந்தார். இப்படம் அண்மையில் அமேசான் பிரைமில் வெளியானது.

தற்போது இருக்கும் அவருக்கான புகழ் ஆரம்பகாலகட்டங்களில் அமையவில்லை எனலாம். தற்போது அவர் மலையாள நடிகர் மோகன் லாலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

20 வருடங்களுக்கு முன்னால் சக்ரம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தின் போது இந்த போட்டோ எடுக்கப்பட்டதாம்.

அவரின் இள வயது தோற்றத்தை பார்த்துவிட்டு அவர் தானா இது என பலரும் கேட்டு வருகிறார்கள்.