குளியலறைக்குள் இறந்துகிடந்த நடிகை!!

மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சில தெலுங்கு சீரியல்கள் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் 26 வயது இளம் நடிகை ஸ்ராவனி.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் உள்ள குளியலறையில் தற்கொலை செய்துகொண்டு சடலமாக மீட்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், 26 வயதான ஸ்ராவனி டிக் டாக் ஆப்பிள் பிரபலமாக வலம் வந்த காக்கிநாடா சன்னி என்கிற தேவராஜ் ரெட்டி என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இருவரும் காதலிக்கும் போது தனிமையில் இருந்ததாகவும், தனிமையில் இருந்தபோது அதை ஆபாசமாக வீடியோ எடுத்து சன்னி தொடர்ந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ள ஸ்ராவனியின் பெற்றோர், தங்களது மகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்றும், அப்படி பரப்பாமல் இருக்க பணம் தரும்படி கேட்டு சன்னி தங்களது மகளை பலமுறை மிரட்டியதாக கூறியுள்ளனர்.

இதன்பின்னர், ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும், ஆனால் மேலும் பணம் வேண்டும் என சன்னி தொடர்ந்து மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஸ்ராவனியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளன்னர்.

இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படும் நிலையில் இதுகுறித்து சன்னி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், நானும் ஸ்ராவனியும் காதலித்தது உண்மைதான் எனவும் ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்பாகவே பிரிந்து விட்டதாகவும், அதன் பிறகு நாங்கள் தொடர்பில் இல்லை எனவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பு கடந்த 7ஆம் தேதி ஸ்ராவனி தனக்கு ஒரு ஆடியோ அனுப்பியதாகவும், அந்த ஆடியோவில் தனது தற்கொலைக்கு எனது பெற்றோர் மற்றும் சாய் என்பவர்தான் காரணம் என தெரிவித்துள்ளதாக அந்த ஆடியோவை சன்னி வெளியிட்டுள்ளார்.

தற்போது இரு தரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நடிகையின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

26 வயது இளம் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.