விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்த அனிகாவிற்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா?

கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம்.

இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது, அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அப்படத்தில் உள்ள அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகள், தல அஜித்திற்கு மகளாக அனிகா நடித்து அசத்தியிருப்பார்.

மேலும் இதற்கு முன் என்னை அறிந்தால் திரைப்படத்திலும் தல அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை அனிகா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை அனிகா ஒரு பேட்டியில் தனக்கு தளபதி விஜய்யை பிடிக்கும் எனவும்.

அவருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றால் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளி குதிப்பேன் என கூறியுள்ளார்.