நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் மக்களுக்கு அதிகம் தெரியும். ஆனால் சில படங்களை இவர் இயக்கி நடித்தும் இருக்கிறார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பெரிய அளவில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
தற்போது, லட்சுமி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்
சமீபத்தில், இவர் அந்த ஷோவில் கமல் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி பலரால் விமர்சிக்கப்பட்டது. தற்போது, இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், ” எனக்கு 16 வயதில் நிச்சயதார்த்தம் நடைபெற்று 18 வயதில் திருமணம் ஆனது. 42 வயது வரை எனக்கு சினிமா உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை.
மற்றவர்கள் போல நான் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாகவும், குழந்தைபோன்று ஆச்சரியத்துடனும் பார்த்தேன். 45வது வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே star-struck ஆகிவிட்டேன்.
அவர் என்னைப் பார்த்து, “என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்” என்று சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாக கலாய்த்தார்கள்.
இதைத்தான் நான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பகிர்ந்தேன். இதைப் தவறாக புரிந்து, செய்தியாக மாற்றி பரப்புவது நியாயமற்றது, மிகுந்த நாகரிகமற்றதும்கூட” என்று தெரிவித்துள்ளார்.







