பொதுமக்கள் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வாட்ஸ்அப் WhatsApp மோசடிகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
புதிய வகை தொலைபேசி அழைப்புகள் மற்றும் தவறான செய்திகளின் மூலம் OTP (One-Time Password) எண்களைப் பெற முயலும் மோசடிக் குழுக்கள் சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனுமதியில்லாத WhatsApp அழைப்புகள், நம்பிக்கை ஏற்படுத்தும் போலியான மெசேஜ்கள், இவை மூலம் பயனாளர்களிடம் ஓ.ரீ.பீ OTP எண்கள் கேட்டு பெறப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓ.ரீ.பீ எண் வழங்கப்பட்டவுடன், குற்றவாளிகள் அந்த நபரின் வாட்ஸ்அப் WhatsApp கணக்கை முழுமையாக கட்டுப்படுத்திக் கொண்டு, அவருடைய பெயரில் பணமோசடிக்கான செய்திகளை அவரது தொடர்புகளுக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
OTP எண்கள், கணக்கு உறுதிப்படுத்தல் குறியீடுகள் போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம், எந்த சந்தர்ப்பத்திலும் இணையதள கணக்குகளுக்கான OTP குறியீடுகளை மற்றவர்களுக்கு வழங்காதீர்கள், சந்தேகத்திற்கிடமான அழைப்புகள், மெசேஜ்கள் வந்தால் உடனே நிராகரிக்கவும், அதிகாரப்பூர்வமில்லாத தொடர்புகளை தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நிதி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புடன் செயல்பட்டு விழிப்புடன் இருக்க பொதுமக்கள் அனைவருக்கும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.







