அன்ரோயிட் சாதனங்களில் தனது தேடுபொறியை நுழைத்துள்ள மைக்ரோசொப்ட்

தற்போது வரையில் கூகுள் தேடுபொறியே அன்ரோயிட் சாதனங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் மைக்ரோசொப்ட் தனது தேடுபொறியான Bing இனை அன்ரோயிட் சாதனங்களில் புகுத்த முடிவெடுத்துள்ளது.

அன்ரோயிட் இயங்குதளம் கூகுளினுடையது என்பதனால் அந்நிறுவனம் மைக்ரோசொப்ட் தேடுபொறிக்கு முன்னுரிமை வழங்காது.

எனவே அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் Outlook அப்பிளிக்கேஷனில் தனது தேடுபொறியினை நுழைத்துள்ளது.

பயனர்கள் Outlook அப்பிளிக்கேஷனில் ஏதாவது சொற்களை ஹைலைட் செய்யும்போது Bing தேடுபொறிமூலம் தேடுமாறு காண்பிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் குறித்த தேடுபொறி பயனர்கள் மத்தியில் மேலும் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.