இன்றைய உலகில் பொதுவாக அனைவருக்குமே தூக்கம் என்பது இன்றியமையாதது ஆகும்.
ஆனால் சிலபேருக்கு படுத்ததும் துக்கம் வருவது என்பது மிகவும் கடினமானதாகும். இதற்கு வேலைச்சுமை, மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும்.
நல்ல உறக்கம் வேண்டும் எனில் மனதை சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அந்தவகையில் படுத்ததும் தூக்கத்தை பெற என்ன உணவுகளை சாப்பிடலாம் என இங்கு பார்ப்போம்.
- வால்நட்ஸ் தூக்கத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன் மெலடோனின் சிறந்த உணவு ஆதாரமாக விளங்குகிறது. எனவே தூங்குவதற்கு முன்பு வால்நட்ஸ் பருப்புகளை எடுத்துக் கொள்வது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை வழங்கும்.
- சால்மன் கொழுப்பு நிறைந்த மீனாகும். இவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், விட்டமின் டி ஆகியவை தூக்கத்தை ஊக்குவிக்கும் மூளை ரசாயனமான செரோடோனின் உற்பத்தியை தூண்ட உதவுகிறது.
- கிவி பழங்களில் தூக்க சுழற்சியை சீராக்க உதவும் மூளை இராசயனமான செரோடோனின் நிறைந்துள்ளது. இது விட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகளின் வளமான ஆதாரமாக உள்ளது. இது மீண்டும் நன்றாக தூங்க உதவுகிறது.
- பாதாம் பருப்புகள் தூக்கத்தை கட்டுப்படுத்தும் மெலடோனின் ஹார்மோனின் வளமான ஆதாரம் ஆகும். இது மெக்னீசியத்தை கொண்டுள்ளது. இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
- செர்ரி பழங்களில் மெலடோனின், டிரிப்டோபான், பொட்டாசியம் மற்றும் செரோடோனின் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் உங்களுக்கு நன்றாக தூங்க உதவுகிறது. மேலும் இதில் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இது தூக்க ஒழுங்குமுறையை கட்டுப்படுத்த உதவுகிறது.