ஸ்கைப் அப்பிளிக்கேஷனை உருவாக்க உதவியவர் இளம் வயதில் மரணம்

தற்போது உலக அளவில் அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன்களில் ஸ்கைப் அப்பிளிக்கேஷனும் ஒன்றாகும்.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரையிலும் தனியான ஆதிக்கத்தினை செலுத்தி வந்தது.

இவ்வாறான அப்பிளிக்கேஷனை வடிவமைப்பதில் உதவிய Toivo Annus எனும் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் தனது இளம் வயதில் மரணமடைந்துள்ளார்.

இதன்படி தனது 48 வது வயதில் கடந்த ஜுலை 12 ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்பாராத நோய்நிலைமை ஒன்றிற்கு உள்ளாகியிருந்த நிலையிலேயே Toivo Annus மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்கைப் அப்பிளிக்கேஷன் ஆனது 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோதிலும் 2012 ஆம் ஆண்டிலிருந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் நாள்தோறும் 40 மில்லியன் பயனர்கள் இந்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.