பேஸ்புக் நிறுவனமானது அதிவேக இணைய இணைப்பினை வழங்க தீர்மானித்துள்ளது.
இதற்காக மின் இணைப்பு வடங்களுடன் ஒளியியல் நார் வடங்களையும் இணைத்து இணைய இணைப்பினை வழங்கவுள்ளது.
இவ்வாறு மின்வடங்களுடன் ஒளியியல் நார் வடங்களை இணைப்பதற்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக ULC Robotics உடன் பணியாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஒளியியல் நார் வடங்களிலிருந்து 10 கிலோ மீற்றர்கள் தூரம்வரை இருக்கும் பயனர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த அதிவேக இணைய இணைப்பினை வழங்க முடியும் என பேஸ்புக் எதிர்பார்க்கின்றது.
எவ்வாறெனினும் தற்போதுள்ள இணையத் தொழில்நுட்பங்களில் ஒளியியல் நார் ஊடான இணையத் தொழில்நுட்பமே அதிக செலவு கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.