தமிழகத்தில் உள்ள வெட்டுக்கிளிகளால் ஆபத்தா.? வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி விளக்கம்.!!

விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கிளிகள், தற்போது விவசாயிகளின் விளைநிலத்தை அழித்து வருகிறது. தனியாக இருக்கும் போது அமைதியாக இருக்கும் வெட்டுக்கிளிகள், கூட்டம் கூட்டமாக சேரும் நேரத்தில் உணவு தானியத்திற்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு தேவையான உணவுகளை சாப்பிடும் வெட்டுக்கிளிகள், மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து பிரச்சனையை ஏற்படுத்துகிறது. முன்னதாக பல நாடுகள் இது போன்ற பிரச்சனையை சந்தித்து வந்த நிலையில், இந்தியாவில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் அராஜகம் வெட்டுக்கிளிகள் செய்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேரலகிரி என்ற கிராமத்தில் வெட்டி கிளிகளின் தொடர் வேட்டை ஆரம்பமானது. தமிழக – ஆந்திர எல்லையில் கூட்டம் கூட்டமாக காணப்படும் வெட்டுக்கிளிகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவை வடமாநிலங்களில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் அல்ல என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேட்டி அளித்தார். வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. பீகார், ஒடிசா வரை வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என தேசிய அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்தியாவின் தெற்குப் பகுதியில் வெட்டுக்கிளி ஆபத்து குறைவாகவே உள்ளது . கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள். தமிழகத்தில் 200 வகையான வெட்டுக் கிளிகள் உள்ளன.

தமிழகத்தில் நன்மை செய்யும் வெட்டுக்கிளி வகைகளும் இருக்கலாம். மாவட்ட வாரியாக வேளாண், தீயணைப்பு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். வெட்டுக்கிளி வந்தால் அதனை அழிப்பதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும். வெட்டுக்கிளிகளை அழிக்க 3 வகையான வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன என வேளாண் துறை செயலாளர் தெரிவித்தார்.