தமிழகத்தில் 4 மாவட்டத்திற்கு மட்டும் ஊரடங்கா.? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சிறப்பு மருத்துவர் குழு ஆலோசனை .!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸில் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் மருத்துவர் குழு ஆலோசனை நடத்தியது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்குப் பிறகு மருத்துவர் குழு செய்தியாளர் சந்திப்பு. இது ஒரு புதிய வைரஸ் – அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி வருகிறோம்.

ஒட்டு மொத்த இந்தியாவில் 70 சதவீத பாதிப்பு 30 மாவட்டங்களில் மட்டுமே இருக்கிறது. பாதிப்பு அதிகமாக அதிகமாக கொரோனா வார்டு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாவதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் முக கவசம் அணிய வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஊரடங்கை நீட்டிப்பது நல்லது. தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை.

தொடக்க நிலையிலேயே மருத்துவர்களை அணுக வேண்டும். இருமும் போது கைகளை மூடிக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். பீதியைக் கிளப்புவதை தவிர்க்க வேண்டும் – பயத்தை கிளப்ப வேண்டாம் – ஒத்துழைக்க வேண்டும் என மருத்துவர் குழு தெரிவித்துள்ளார்.