ஹீரோக்களை டம்மி ஆக்கிய திரைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தை ஆரம்பிக்கும் போது இவர்தான் ஹீரோ என்று ஒருவரை குறிப்பிடுவார்கள்.

ஆனால் படம் பார்த்த பின்பு ஹீரோக்களை விட மற்ற கதாபாத்திரங்களே மனதில் நிற்கும் அப்படி ஹீரோக்களை டம்மி ஆக்கிய படங்கள் என்னென்ன என்று தான் பார்க்க போகிறோம். இதோ

1. ஹீரோ

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தாலும், நம் மனதில் நின்ற கதாபாத்திரம் நடிகர் அர்ஜுன் தான்.

2. ஜிகிர்தாண்டா

சித்தார்த் ஹீரோவாக இருந்தாலும் அசால்ட் சேது கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாபி சிம்ம தான் நம் மனதில் நின்றார்.

3. 8 தோட்டாக்கள்

வெற்றி என்பவர் ஹீரோவாக இருந்தாலும் கூட படத்தில் நடித்திருந்த எம்.எஸ். பாஸ்கர் அவர்களின் கதாபாத்திரம் தான் நம் மனதில் இருந்து நீங்காதது.

4. ஸ்பைடர்

மகேஷ் பாபுவின் நடிப்பு சிறந்ததாக இருந்தாலும் கூட, நடிகர் எஸ்.ஜெ. சூர்யாவின் சுடலை என்கிற கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் நின்ற கதாபாத்திரம்.

5. வின்னர்

படத்தில் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடித்திருந்தாலும், இப்படம் வெற்றி படமாக அமைய முக்கிய காரணம் வடிவேலு நடித்திருந்த கைப்புள்ள கதாபாத்திரம் தான்.

6. தனி ஒருவன்

ஜெயம் ரவியின் கதாபாத்திரம் மிக சிறந்ததாக இருந்தாலும் கூட, அரவிந்த் சாமி நடித்திருந்த வில்லன் கதாபாத்திரம் தான் படத்தின் வெற்றி என்று கூட கூறலாம்.

7. பாஸ் என்கிற பாஸ்கரன்

படத்தின் ஹீரோ ஆர்யா, ஆனால் படத்தை தாங்கி நின்றது சந்தானத்தின் நல்லதம்பி எனும் கதாபாத்திரம் மட்டும் தான்.