தற்போது நாடு முழுக்க கொரோனா ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தொழிலகளை கவனிக்க முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். பலரும் வறுமைக்கு தள்ளப்பட்டனர்.
சினிமா, சீரியல் வட்டாரத்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் அதை சார்ந்து பிழைப்பு நடத்துவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பெரிய பிரபலங்கள் சிலர் சக ஊழியர்களுக்கு நிவாரண நிதி உதவி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீரியல் நடிகர் மன்மித் கிரேவால் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதத் சே மஜ்பூர் என்ற நகைச்சுவை சீரியல் மூலம் பிரபலமான அவர் மும்பையில் மனைவியுடன் கார்கர் நகரில் வசித்து வந்துள்ளார்.
கொரோனாவுக்கு முன்பே அவர் வேலை வாய்ப்பில்லாமல் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார்.
ஊரடங்கால் மிகவும் வறுமையில் இருந்த அவர் வீட்டில் ஃபேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
அவர் மனைவி கணவரின் நிலை கண்டு கூச்சலிட்டு உதவிக்கு அழைத்த போது கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வரவில்லையாம்.
இதனால் காவலாளி வந்து துப்பட்டாவை கத்திரித்து மருத்து மனைக்கு நடிகரின் உடலை எடுத்து செல்ல மன்மீத் இறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளார்.
மேலும் விசாரிக்கையில் அவர் வீட்டு வாடகை ரூ 8500 கட்ட முடியாத நிலையிலும், மிகுந்த கடன் பிரச்சனையிலும் இருந்தது தெரியவந்துள்ளது. மன்மீத்துக்கு வயது 32. வாழ வேண்டிய வயதில் இப்படி அவர் இறந்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.