அஜித் சொன்ன வார்த்தை! நிரூபித்துக்காட்டிய படம்!

அஜித் சினிமாவில் தல என அனைவராலும் கொண்டாடப்படுபவர். தீனா படத்தில் அவரை தல என அழைக்கப்பட்டதால் தான் என முழுமையாக கூறிவிடமுடியாது. ஓரிரு நாட்களில் அவர் இந்த உயரத்தை இந்த புகழை அடையவில்லை. படிப்படியாக பல தோல்விகள் மூலம் கிடைத்த பாடத்தின் மூலமே தான் அவர் இந்த உயர் புகழை அடைந்திருக்கிறார்.

பைக் ஆசை, மாடலிங் என தான் விரும்பியதை விட்டுவிட வேண்டிய இக்கட்டான நிலைக்கு வாழ்க்கை சூழல் அவரை தள்ளியது. லட்சியத்துடன் போராடி அவர் மீண்டு வந்ததை மறக்க முடியாது.

அமராவதி படத்தில் அறிமுகமான அவர் ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஹீரோ கிடைச்சாச்சு என ரசிகர்கள் மகிழும் நிலைக்கு வந்தார்.

ஆரம்ப காலங்களில் அவர் இயக்குனர்கள் மீது வைத்த நம்பிக்கையால் நடித்த படங்கள் தோல்வியை தழுவ அதிலிருந்து ஆக்‌ஷன் ஹீரோவாக வெற்றி நாயகனாக மாறினார்.

ஆசை, காதல் கோட்டை படங்களுக்கு பின் அறுவை சிகிச்சை செய்து வந்த நேரத்தில் அவர் ரசிகைகள் என் அழகுக்காகஎன்னை ரசிக்கக்கூடாது! நடிப்பை தான் அவர்கள் விரும்ப வேண்டும் என கூறினார். அவர் சொன்னதை நிறைவேற்றிய படம் தான் வாலி.

அவரை தல அந்தஸ்துக்கு உயர்த்திய 10 வெற்றி படங்களை இப்போது காணலாம்.

  • அமராவதி
  • ஆசை
  • காதல் கோட்டை
  • வாலி
  • அமர்க்களம்
  • பில்லா
  • மங்காத்தா
  • வீரம்
  • வேதாளம்
  • விஸ்வாசம்