உலகம் முழுக்க கொரோனா நோய் தொற்றால் 34 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதே வேளையில் இந்நோயால் இறந்தவர்கள் 2.39 லட்சம் பேர். எதிர்பாராத பெரும் சிரமத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளார்கள்.
அதே வேளையில் பல நாடுகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 30 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நாளை முடியும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இன்னும் இரண்டு வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் பலருக்கு பொழுதுபோக்கு நண்பனாக இருப்பது டிவி சானல்கள் தான். கொரானா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருப்பதால் பழைய சீரியல்களை பல சானல்களும் ஒளிபரப்பி வருகின்றன.
அரசுத் தொலைக்காட்சியான பொதிகையின் மீண்டும் கடந்த ஏப்ரல் 16 ம் தேதி முதல் ராமாயணம் ஒளிபரப்பட்டது.
இந்த தொடரை 7.7 கோடி பேர் பார்த்துள்ளனர் என்றும், இது உலக சாதனை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த சீரியலை அப்போதே 82 சதவீதம் பேர் பார்த்துள்ளார்களாம். இப்படியான இந்த சீரியலில் ராமராக அருண் கோவிலும், சீதையாக தீபீகா சிகாலியாவும், அனுமனாக தாரா சிங்கும் நடித்துள்ளனர்.