நடிகை ஜோதிகா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இருவரும் கறுப்பு ஆடையில் ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். ஆதாம் ஏவாள் காதலுக்குப் பிறகு தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட காதல் சூர்யா-ஜோதிகா காதல் தான்.
தமிழ் சினிமாவில் பல நட்சத்திர ஜோடிகள் இருந்தாலும் சூர்யா – ஜோதிகா ஜோடி இன்றும் தனி சிறப்பு பெற்று விளங்குகின்றார்கள்.
சூர்யாவும் ஜோதிகாவும் முதலில் சந்தித்தது 1999 ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் இணைந்து நடித்த “ பூவெல்லாம் கேட்டு பார்” படப்பிடிப்பில் தான்.
பின்னர் 2001 ஆம் ஆண்டில் ஒரு படப்பிடிப்பில் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த இரண்டாம் சந்திப்பு தான் இவர்களின் காதலில் திருப்புமுனையாக இருந்துள்ளது. தற்போது அந்த அழகிய காதலுக்கு அடையாளமாக 2007-ல் தியா 2010-ல் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த ஜோடியின் புகைப்படத்தினை ரசிகர்கள் இணைத்தில் வைரலாக்கி வருகின்றனர்.







