அட்லியின் அடுத்த படத்தில் அஜித் பட நடிகர்!

சிறு வயதிலேயே சாதித்தவர் இளம் இயக்குனர் அட்லி. ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் படங்களை எடுத்து வெற்றி பெற்றார்.

சினிமாவில் அடுத்ததாக இவர் தயாரிப்பாளராக தன் பரிமாணத்தை தொடங்கினார். ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ திற படத்தை தயாரித்திருந்தார்.

ஆப்பிள் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் மூன்று வருடங்கள் கழித்து அவர் தற்போது அந்தகாரம் என்ற படத்தை தயரிக்கிறார்.

இதற்கான அறிவிப்புகள் நேற்று ட்விட்டரில் வெளியானது. கைதி, மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிற அர்ஜூன் தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கிரீடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனராம்.

சுசி சித்தார்த் இப்படத்தை இயக்க, திரு அமுதன் ஒளிப்பதிவு செய்கிறாராம்.

மீஷா கோஷன் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.