டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் பிரபலமானவர்களில் ஒருவர் ஜாக்குலின். நிகழ்ச்சிகளில் அவரை மற்றவர்கள் அதிகம் கலாய்ப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
நயன்தாராவுக்கு தங்கையாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார். தற்போது டிவி சீரியலிலும் நடித்து வருகிறார்.
கொரோனாவால் தற்போது ஊரடங்கு நிலை நீடிப்பதால் படப்பிடிப்புகள் நின்றுபோயுள்ளது. நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பும் நடைபெற வில்லை.
இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஜாக்குலின் தெரு நாய்க்கு அருகிலுள்ள வீட்டின் முன் உணவு வைத்தாராம்.
இதனால் பக்கத்து வீட்டு நபர் ஜாக்குலினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஜாக்குலின் தன்னுடைய தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அந்த நபர் ஜாக்குலினின் வீடு புகுந்து தாக்கியுள்ளார். மேலும் அவர் ஜாக்குலினின் மதத்தை குறிப்பிட்டு தவறாக பேசியுள்ளாராம்.
இதனால் ஜாக்குலின் மனம் வாடியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.







