தற்போது உலகளவில் Zoom அப்பிளிக்கேஷன் ஆனது ஒன்லைன் தொடர்பாடலிற்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றமை அறிந்ததே.
எனினும் இந்த அப்பிளிக்கேஷனில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதாவது சிங்கப்பூரில் ஆசிரியர்கள் ஒன்லைன் ஊடாக மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்தியுள்ளனர்.
இதன்போது திடீரென ஆபாச படம் திரையில் தென்பட்டுள்ளது.
இதனை அடுத்து கற்றல் செயற்பாட்டிற்கு குறித்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதற்கு சிங்கப்பூரில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.