தோல் புற்றுநோயை கண்டுபிடிக்க மொபைல் அப்பிளிக்கேஷன்

ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மொபைல் அப்பிளிக்கேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் தோல் புற்றுநோய் உட்பட மேலும் சில குறைபாடுகளை கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.

தென்கொரியாவில் உள்ள Seoul National University ஆராய்ச்சியாளர்களே இந்த அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளனர்.

இதற்காக 174 வகையான தோல் நோய்கள் தொடர்பான 220,000 புகைப்படங்கள் சேகரித்து பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் குறித்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது 134 வகையான தோல் நோய்களை கண்டறியக்கூடியதாக இருக்கின்றது என குறித்த ஆராய்ச்சியாளர் குழு தெரிவித்துள்ளது.