பிரபலனமான கிளவுட் சேவை வழங்குனர்களில் ஒன்றாக மைக்ரோசொப்ட் நிறுவனம் விளங்குகின்றது.
தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் கிளவுட் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 775 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாள்தோறும் 44 மில்லியன் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்துவரும் நிலையில் பல நிறுவனங்கள் தமது பணியாளர்களை வீட்டிலிருந்தவாறே பணிபுரியுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதன்காரணமாகவே கிளவுட் சேவைப் பயன்பாடு வெகுவாக அதிகரிதுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.