மணிக்கு 250 மைல் தூரத்தை கடந்த ஸ்பீடுடயல்: மெக்லாரன் ரேஸ் கார்கள்

பந்தயங்களுக்கான கார்களை தயாரித்து வரும் மெக்லாரன் (McLoren) நிறுவனம், இதுவரையிலான அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளின் வேகத்தை முறியடிக்கும் வகையில் புதிய கார் ஒன்றை உருவாக்கியுள்ளது.

அந்த காரின் பெயர் மெக்லாரன் ஸ்பீடுடயல் (McLoren Speed Dial), இந்த காருக்கான சோதனை ஒட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது.

250 மைல் (402 கிலோ மீட்டர்) தூரத்தை 1 மணி நேரத்தில்கடந்து இந்தக் கார் அந்நிறுவனத் தயாரிப்புகளில் புதிய உச்சத்தைத் தொட்டது.

மெக்லாரன் நிறுவனத்தின் அதிவேகமான கார் என்ற பட்டத்தையும் ஸ்பீடுடயல் தட்டிச் சென்றுள்ளது.

இதற்கு முன்பு இந்தப் பட்டத்தை இதே மெக்லாரன் நிறுவனத்தின், எஃப்1(F1Hyfer) ஹைபர்கார் சூடி இருந்தது. 375 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரத்தில் கடந்து எஃப் 1 அந்தப் பட்டத்தை பெற்று இருந்தது. இந்நிலையில் அந்தப் பட்டத்தை தற்போது ஸ்பீடுடயல் கைப்பற்றியது.