அண்மையில் பெய்த மழை வெள்ளத்தினால் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட வீதிகளைப் புனரமைத்து தருமாறு கோரிக்கை

அண்மையில் பெய்த பலத்த வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு – போரதீவுப்பற்று, சுரவணையடியூற்று கிராமத்தின் உள்வீதிகள் வெள்ளநீர் ஓடி போக்குவரத்துச் செய்ய முடியாத அளவிற்கு சிதைவடைந்து காணப்படுகிறது.

எனவே, வருடாந்தம் இவ்வாறு மழை வெள்ளத்தினால் பாதிப்புற்றுவரும் எமது கிராமத்திலுள்ள கிறவல் மற்றும் மணல் வீதிகளைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துரிதகதியில் புனரமைத்து தருமாறு அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.