எம் குமரன் படத்தின் தாயும், மகனும் இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

நடிகை நதியா அண்மையில் ஜெயம் ரவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து 80,90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து செட்டிலாகினார்.


அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது ஜெயம் ரவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி தாய், மகன் உறவை பற்றி கூறி வருகின்றனர். நதியாவின் நிஜ மகன் போலவே அந்த படத்தில் அவரின் நடிப்பும் இருந்தது.

தற்போதும், ரசிகர்கள் இருவரையும் தாய் மற்றும் மகன் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர்.

இந்நிலையில் அண்மையில் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.