யார் கண்ணிலும் சிக்காத மறைந்த சரோஜாதேவியின் புகைப்படங்கள்!

மறைந்த நடிகை சரோஜா தேவியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை சரோஜா தேவி
கன்னட திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரைப்படத்தை ஆரம்பித்தவர் தான் நடிகை சரோஜா தேவி.

இவர் நடிப்பில் வெளியான முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றதன் மூலம் அவரது திறமை பிரபலமானது.

அதன் பின்னர், கடந்த 1958ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 1959ல் கல்யாண பரிசு திரைப்படத்தில் நடித்து மாபெரும் நடிகையாக மாறினார்.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் திரையுலகில் இணைந்து நடித்தார். பார்வையாளர்களின் மனதில் நிலைத்து நின்று விட்ட படங்கள் அடிப்படையில் பார்த்தால் பார்த்திபன் கனவு, அன்பே வா, ஆசை முகம், ஆலையமணி, எங்கள் வீட்டுப்பிள்ளை, கல்யாண பரிசு போன்றவையாகும்.