பெண்களை மயக்க பேருந்தை காட்டுமிராண்டித்தனமாக ஓட்டிய கொடூரன்.! அரங்கேறிய பெரும் சோகம்..

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளித்தலையில் பழைய பாலம் செல்லும் சாலையில் தேவி குமாரி மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் இச்சாலை வழியாக தினமும் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.

கடந்த 11-ம் தேதியன்று கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில்., இந்த குறுகலான சாலையில் பள்ளி பேருந்து ஒன்று மாணவிகள் சென்ற திசைக்கு எதிர்திசையில் வந்துள்ளது.

இந்த நேரத்தில்., இதற்கு எதிர் திசையில் வேகமாக மினி பேருந்து ஒன்று வந்து., சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த மாணவிகள் மீது மோதியது. வாகனத்தை கட்டுப்படுத்த இயலாத ஓட்டுனர் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்த மினி பேருந்து மீது மோதி மாணவியின் மீது இடித்து நிறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 11 ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில்., தற்போது இதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதற வைத்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய சுஜிதா என்ற தனியார் மினி பேருந்து நிறுவனம்., மேல்புறம் என்ற பகுதியில் இருந்து புறப்பட்டு குளித்துறை சந்திப்பு வரை வந்து செல்ல பர்மிட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்., பர்மிட் விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு மகளிர் கல்லூரியில் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேருந்து ஓட்டுநராக 25 வயதுடைய பிபின்ராஜ் என்பவர் பணியாற்றி வரும் நிலையில்., கல்லூரி மாணவிகளிடம் தனது வித்தையை காண்பிக்க ரோமியோ போல செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.


கல்லூரி மாணவிகளிடம் வித்தை காட்ட இவ்வாறு அவ்வப்போது அதிவேகத்தில் வாகனத்தை இயக்க வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மொத்தமாக 20 பேர் காயமடைந்த நிலையில்., ஒரு மாணவி ஏழ்மையில் கஷ்டப்பட்டு படிக்க வந்த நிலையில்., அவருடைய மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல் துறை அதிகாரிகள் சார்பாக ஓட்டுனரின் லைசன்ஸ் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற விபத்து வரும் காலத்தில் ஏற்படாதவண்ணம் காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.