இன்றைய ராசிபலன் (23.11.2019)

விகாரி ஆண்டு – கார்த்திகை 7 – சனிக்கிழமை (23.11.2019)
நட்சத்திரம் : அஸ்தம் பகல் 2.04 வரை பின்னர் சித்திரை
திதி : ஏகாதசி அதிகாலை 3.56 வரை பின்னர் துவாதசி
யோகம் : மரண யோகம்
நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / மாலை 4.45 – 5.45

சனிக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசி நேயர்களே, சுபகாரியங்களில் இருந்த தடைகள் அகலும். திடீர் பயணம் உற்சாகம் தரும். கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷப ராசி
ரிஷப ராசி நேயர்களே, புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும்.

மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களே, பொறுமையோடு இருக்க வேண்டிய நாள். வாழ்க்கைத் தரம் உயர வழி கிடைக்கும். கஷ்ட, நஷ்டங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி
கடக ராசி நேயர்களே, பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உங்கள் எண்ணத்தின்படி எல்லா காரியங்களும் சிறப்பாக நடக்கும். சேமிப்பு வகையில் பண வரவு இருக்கும். உத்யோகத்தில் இருந்த நிலுவை தொகை கைக்கு வரும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி நேயர்களே, குடும்ப நலனில் கவனம் செலுத்தவும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

கன்னி ராசி
கன்னி ராசி நேயர்களே, உங்களிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பெற்றோர்களின் அன்பும், அதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர். நண்பர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். மனதில் நினைத்த காரியம் வெற்றிதரும். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே, தெய்வவழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகர ராசி
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மனதில் இருந்த வீண் கவலை அகலும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். உத்யோக மாற்றம் உண்டாகும்.

கும்ப ராசி
கும்ப ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் வெற்றியடையும். மனமகிழ்ச்சி அடையக்கூடிய சம்பவங்கள் நடக்கும். வாகன பயணத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

மீன ராசி
மீன ராசி நேயர்களே, வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்க முடியும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும்.