கோட்டாபய ராஜபக்சவிற்கு வாழ்த்து சொன்ன ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.

கோட்டாபயவின் ஆட்சியின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உரையாடல் மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் என்று புடின் தனது செய்தியில் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் என்று அவர் கூறியிருந்தார்.

ரஷ்ய-இலங்கை உறவுகள் பாரம்பரியமாக நட்புரீதியானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.