போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய பலர் கைது!

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக, மேலும் 989 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, போதைப்பொருள் மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட ஏராளமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 26,560 நபர்கள் சோதனை செய்யப்பட்டதுடன், 11,053 வாகனங்கள் மற்றும் 8,444 உந்துருளிகள் சோதனை செய்யப்பட்டன.

இந்த சோதனைகளின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 989 பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 18 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 528 கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக, நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது, 674 கிராம் 959 மில்லிகிராம் ஹெரோயின், 193 கிராம் 116 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 52 கிலோகிராம் 714 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.