கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்கவுக்கு விசேட அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து அவசர அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேயர் ரோஸி சேனாநாயக்கவுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் தொடர்பில் விசாரிக்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

ரோஸி சேனாநாயக்க மேயராக தனது கடமைகளைத் செய்யாது, UNPயின் அரசியல் நடவடிக்கைகளில் தலையிட்டு இருப்பதுடன்,நகராட்சி மன்றத்தின் பொறுப்புகளை ஒழுங்காக நிறைவேற்றவில்லை என்றும் அவர் மீது ஜனாதிபதி கோட்டாபயவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமனம் பெற்ற பிறகு பணிகள் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், நகர குப்பைகளை அகற்றுவது போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ரோஸி சேனாநாயக்கவின் நிர்வாகம் மிகவும் பலவீனமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் இந்த விவகாரம் சரி செய்யப்படாவிட்டால் கொழும்பு நகரசபையின் நடவடிக்கைகள், சிறப்பு ஆணையாளரின் கீழ் நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.