சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது : பதினாறு மணித்தியாலம் வேலை செய்யும் 3 வயது குழந்தைகள்

அப்படித்தான் மடகஸ்காரில் 03 வயது குழந்தைகளை 16 மணித்தியாலம் வேலைக்கு அமர்த்தும் சில காணொளிகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

மடகஸ்காரில் கையடக்கத் தொலைபேசிகளுக்கு சக்தியளிக்கப் பயன்படும் மைக்கா கனிமத்தை அகழும் சுரங்கங்களில் 3 வயதுடைய சிறார்கள் உள்ளடங்கலான சிறுவர்கள் 100 பாகை வெப்பத்தை தாங்கி நாளொன்றுக்கு 16 மணி நேரம் பணியாற்றி வருவது தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான ஆவணப் படத்தின் முதலாம் பாகம் நேற்று திங்கட்கிழமை இரவு என்.பி.சி. ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆவணப் பட வாரமொன்றுக்கு மொத்தமாக 3 டொலரிலும் குறைந்த ஊதியத்தை பெற்று இளம் தாயொருவரும் அவரது 5 வயதுக்கு கீழ்ப்பட்ட நான்கு பிள்ளைகளும் தினசரி ஆற்றும் பணியை விபரிக்கிறது.

அவர்கள் ஒரு கோப்பை உணவை தம்மிடையே பங்கீடு செய்து வயிற்றுப் பசியைத் தணிவித்துக் கொண்டு வியர்வை சிந்திப் பணியாற்ற அந்த மைக்கா சுரங்கத்தை செயற்படுத்தும் கம்பனியோ மைக்காவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருந்தொகைப் பணத்தை சம்பாதித்து வருகிறது.

மைக்கா அகழும் சுரங்கங்களில் சிறிய கரங்களைக் கொண்ட சிறுவர்களைப் பயன்படுத்துவது அனுகூலமளிப்பதாகவுள்ளதாக அந்த சுரங்கத்தை மேற்பார்வை செய்யும் அதிகாரியொருவர் பெருமிதத்துடன் கூறுவது அந்த ஆவணப்படத்தில் பதிவாகியுள்ளது.

மைக்காவானது கையடக்கத்தொலைபேசிகளுக்கு மட்டுமல்லாது விமானங்கள், கார்கள் என்பனவற்றுக்கு சக்தியளிக்கவும் பயன்படுகிறது