50 வயதிலும் கவர்ச்சி குறையாத ரோஜா பட நடிகை

அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்த ரோஜா படத்தின் மூலம்  ரசிகர்களை கவர்ந்த மதுபாலா, 90களில்  முன்னணி நடிகையாக வலம்வந்தார்.  மேலும் அவர் நடித்த ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி, மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட  படங்களில் புகழை எட்டினார்.

இதை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு நடிகை ஹமா மாலினியின் உறவினர் ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமெயா, கையா என்னும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் பாலிவுட், கோலிவுட் என்று  நடிக்கிறார். தற்போது 50 வயதாகும் இவர் இன்னும் கூட இளமை மாறாமல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

பெரும்பாலும் கவர்ச்சி உடை அணிந்து நிகழ்ச்சிகளில் மகள்களுடன் கலந்து கொள்ளும் இவர் சமீபத்தில் கடற்கரையில் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட சிலர், இந்த வயசுல இது தேவையா? என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.