53 வயதில் சிக்ஸ் பேக்..! ஜிம் ஒர்கவுட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் திரையுலகிலேயே நடிகைகளுக்கு 35 – 40 வயது தாண்டிவிட்டால் போதும் ஹீரோயின் அந்தஷ்த்தை இழந்து அம்மா அக்கா கேரெக்டர் நடிக்க மட்டும் தான் வாய்ப்புகள் இருக்கும். முக்கிய கதாபாத்திரங்களில் இவர்களை ஒதுக்க இயக்குநர்கள் தயங்க மாட்டார்கள்.

ஆனால், ஹாலிவுட் திரையுலகில் 45 -50 வயது ஆனாலும், கதாநாயகிகள் சோலோ ஹீரோயினாகவே நடித்து அந்த திரைப்படத்தை வெற்றியடைய செய்வார்கள். அதுவும் அடுத்த படங்களில் சோலோ கதாபாத்திரத்திலும் கமிட் ஆகுவார்கள்.

அந்த வகையில் தான் ஹோலிவுட்டில் கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாகவும் கலக்கி கொண்டு வருபவர் ‘ஹாலே பெரி’ இவர் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் மூலம் பிரபலமானவர்.

இந்நிலையில் தனது கடுமையான உடற்பயிற்சியால் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்து சிஸ்க்பேக் வைத்துள்ளார் ஹாலே பெரி. அந்த புகைப்படத்தை தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது ஹாலே பெரியின் சிக்ஸ்பேக் புகைப்படங்கள் இணையதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.