கில்லி படத்தின் டையலாகை மாமியாருடன் டிக்டாக் செய்த சாண்டி..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவை பெற்றவர் தான் சாண்டி. இவர் நடன இயக்குனர் என்றாலும் அதையெல்லாம் மறந்து சக போட்டியாளர்களுடன் நண்பர்களாகவே பழகி வந்தார்.

பிக்பாஸ் நாளின் இறுதிவரை சென்ற சாண்டி ரன்னர் அப் என்ற இடத்தையும் பெற்றார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை நகைச்சுவையாகவே சென்றது.

இந்நிலையில் பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் சாண்டி, டிக்டாக், நேர்காணல், டான்ஸ் என பிஸியாகிவிட்டார். தற்போது மாமியாருடன் சேர்ந்து கில்லி படத்தின் வசனத்தை டிக்டாக் செய்து அசத்தியுள்ளார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.