ஆழ்துளை கிணறு… சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சுஜித்: கண்ணீருடன் தாத்தா சொன்ன அந்த தகவல்

திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறில் விழுந்து சிறுவன் சுஜித் மரணமடைந்ததற்கு பெற்றோரே காரணம் என பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில், முதன் முறையாக சுஜித்தின் தாத்தா மனம் திறந்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்,

சுமார் 80 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணமடைந்த சம்பவம் உலக தமிழர்களை உலுக்கியது.

இந்த நிலையில், சுஜித்தின் மரணத்திற்கு அவரின் பெற்றோரே காரணம் என சமூக ஊடகங்களில் பலர் பரவலாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில்,

சுஜித் மரணம் சந்தேக மரணம் என மணப்பாறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சுஜித் விவகாரம் தொடர்பில் அவரது தாத்தா தேவராஜ் தெரிவித்துள்ள தகவல்கள் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

ஆழ்துளை கிணறு தோண்டியது குறித்து என் மகனுக்கோ, மருகளுக்கோ தெரியாது. அது எங்கள் குடும்ப சொத்து, இந்த பகுதியில் 3 ஆழ்துளை கிணறு தோண்டியிருக்கிறோம்.

ஆனால் எதிலும் தண்ணீர் வரவில்லை. மேலும் இந்த ஆழ்துளை கிணறு வெட்டி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

600 அடிக்கு மேல் போட்டும் தண்ணீர் இல்லை என்றதும் கொஞ்சம் மண் போட்டு சாக்கு வைத்து மூடிவிட்டோம் என்றார்.

மேலும், கடந்த 10 வருடங்களாக அந்த இடத்தில் அந்த குழியின் மேல் விவசாயம் செய்து வருகிறோம்.

அந்த குழி இருந்ததையே மறந்து விட்டோம். அந்த நிலம் பள்ளமான பகுதி கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையில் தண்ணீர் எல்லாம் அந்த ஆழ்குழாயில் நிரம்பியிருக்கிறது.

அதனால் தண்ணீர் உள்வாங்கி அது மீண்டும் திறந்து இருக்கிறது என கவலை மாறாத முகத்துடன் தேவராஜ் தெரிவித்துள்ளார்.