நடிகர் ஷாருக்கானை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.! காரணம் இதுதான்

சமீபத்தில் நடந்த, தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் நடிகர் ஷாருக்கான் கொண்டடிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக வசை பாடி வருகிறார்கள்.

பாலிவுட் திரைத்துறையின் பாட்ஷா என்று அனைவராலும் அழைக்கப்படும் ஷாருக்கான், பாலிவுட் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர். இவர் சமீபத்தில் ஷாருக்கான் அவரது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.

இந்த கொண்டாட்டத்தின் போது நெற்றியில் திலகம் இட்டு, மனைவி மற்றும் மகனுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதை பார்த்த சில முஸ்லீம் நெட்டிசன்கள், நீ ஒரு போலியான இஸ்லாமியர் என்றும் ஒரு இஸ்லாமியராக இருந்தும் எப்படி இந்த தீபாவளியை கொண்டாடலாம் என்று கண்டபடி வறுத்து எடுத்தார்கள்.

ஆனால், இந்த மாதிரியான விமர்சனங்களுக்கு, எதிர்ப்பு தெரிவித்த சிலரோ சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.