சுஜித் மீண்டும் உயிருடன் வருவான்..பிரபல தமிழ் நடிகர்.!!

சுஜித்தின் பெற்றோர்கள் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

சுர்ஜித் மீண்டும் வருவான் அவனது பெற்றோருக்கு எனது வேண்டுகோள்..

குழந்தை சுர்ஜிதின் மரணத்தால் இன்று அக்டோபர் 29 எனது பிறந்த நாளை கொண்டாட மனம் வரவில்லை “ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டு சென்று விட்டான் சுர்ஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது.

இந்நிலையில் சுர்ஜித்தின் பெற்றோருக்கு சொல்ல விரும்புவது..சுர்ஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுர்ஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் ” அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுர்ஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுர்ஜித்தும் தங்களுடனே இருப்பான்..

அப்படி நீங்கள் குழந்தைய தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.