73-வது சுதந்திர தின விழாவில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசு மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் பெண்களுக்கு அக்டோபர் 29-ம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார்.
இதையடுத்து அக் 29-ஆம் தேதி (இன்று) முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் நொய்டா, என்சிஆர் மற்றும் விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பயணிக்கும் அரசுப் பேருந்துகளில் முதல் கட்டமாக இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி அரசு பெண் அதிகாரிகளின் பயணத் தொகை சலுகை நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இன்று முதல் பேருந்துகளில் புதிதாக 13,000 பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.







