நிஜாமின் சொத்துக்கள் இந்தியாவுக்கே சொந்தம்.

லண்டன் வங்கியில் உள்ள ஹைதராபாத் நிஜாமின் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இந்தியாவுக்கே சொந்தம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நீதிமன்றம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

ஹைதராபாத்தை ஆண்டு வந்த நிஜாம் உஸ்மான் அலி கான் 10 லட்சத்து 7 ஆயிரத்து 940 பவுண்டு பணத்தை பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் முதலீடு செய்தார்.

இந்தப் பணத்தை பாகிஸ்தானுக்கான அப்போதைய இங்கிலாந்து தூதர் ஹபிப் இப்ராகிம் ரகிம்தூலா லண்டனில் உள்ள நாட்வெஸ்ட் வங்கியில் வைப்பு செய்தார்.

70 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்த பணம் தற்போது 300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த பணத்திற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் உரிமை கோரி வந்த நிலையில், லண்டனில் உள்ள நீதிக்கான ரோயல் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

70 ஆண்டுகளுக்கு மேலான இந்த வழக்கில் உஸ்மான் அலி குடும்பத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்த லண்டன் உயர் நீதிமன்றம் பாகிஸ்தானின் கோரிக்கையை தள்ளுபடி செய்துள்ளது.