Google Play Store 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்க எண்ணிக்கையில் இருந்து 29 ஆபத்து விளைவிக்கும் செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் Quick Heal Security Labs இன் புதிய அறிக்கையில், இந்த செயலிகளை கூகுள் விரைவில் அகற்றின என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கை தெரிவிக்கையில், ”பெயரிடப்பட்ட இந்தத் தொகுப்பிலிருந்து ஆபத்து விளைவிக்கும் செயலிகளில், ஒரு செயலி மட்டும் 5 மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது. 29 செயலிகளில் 24 செயலிகள் ‘HiddAd’ வகையைச் சேர்ந்தவை. அவை, முதல் அறிமுகத்திற்குப் பிறகு ஐகானை மறைத்து, தொலைபேசியின் முகப்புத் திரையில் shortcut ஆக உருவாக்குகின்றன.
Quick Heal Security Labs படி, செயலிகளின் நோக்கமானது, பயனாளர்களில் செயலியை நீக்காமல், ஐக்கானை டிராக் செய்யும்.
‘மீதமுள்ள 5 செயலிகள் ‘Adware’ வகையைச் சேர்ந்தவை. பொதுவாக அவை விளம்பரங்களின் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் வரும். பயனர்கள் ஒவ்வொரு முறையும் தொலைபேசி செயலியில் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைப் பார்வையிடும்போது, பல விளம்பரங்களைப் பார்க்க ஊக்குவிக்கின்றது.
பல முறை, இந்த விளம்பரப்படுத்தப்பட்ட தொலைபேசி செயலிகள் எக்ஸ்-ரே ஸ்கேனிங் போன்ற நம்பமுடியாத பல செயற்பாடுகளைக் கொண்டுள்ளது என ஊக்குவிக்கிறது. எக்ஸ்-ரே ஸ்கேனிங்கின் செயற்பாட்டை வழங்குவதாகக் கூறும் சில சுவாரஸ்யமான ஆண்ட்ராய்டு செயலிகளின் சில விளம்பரங்களை நாங்கள் கண்டோம். பயன்பாட்டை மேலும் ஆராய்ந்தபோது, இதுபோன்ற இரண்டு செயலிகள் ஏற்கனவே 1 மில்லியனுக்கும் மேலான பதிவிறக்கங்களைக் கடந்துவிட்டன.
‘Adware’ செயலியில் பார்வையை பெரிதாக்கும் செயற்பாட்டை வழங்குவதாக நடித்து வருகிறது. ஆனால் உண்மையில் இவை பயனாளர்களின் மொபைலில் அதிக விளம்பரங்களைக் காட்டுகின்றன. இறுதியில், தொலைபேசி பேட்டரியை குறைத்துவிடுகிறது. மேலும், அதிக டேட்டா பயன்பாடு மற்றும் பாதுகாப்புதிறனின் இழப்பையும் ஏற்படுத்துகின்றன.
அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, இந்த செயலிகள் கமராவைத் திறந்து ஃபிளாஷ் லைட், கேலரி போன்ற பல்வேறு விருப்பங்களைக் காண்பிக்கின்றன. ஆனால் பயனர் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த செயலிகள் முழு திரை விளம்பரங்களாக தோன்றுகின்றன. மூடவோ அல்லது தவிர்க்கவோ எந்த ஆப்ஷனும் இல்லை” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.