ஐரோப்பாவிலேயே மிக அழுக்கான நகரம் பரிஸ் தான் என்று உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பரிசில், அதிகளவில் சிகரெட் துண்டுகள், குப்பை கூழங்கள் நிறைந்து கிடப்பதாகவும், இதனால் பரிஸ் ஐரோப்பாவிலேயே மிக அழுக்கான நகரம் என்பது போன்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தி, பரிஸ் மக்கள் மத்தியிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும், பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த செய்தியானது, சுற்றுலாபயணிகளின் வருகையை குறைக்கும் ஆபத்து உள்ளது எனவும், குறிப்பாக அடுத்துவரும் நகரசபைத் தேர்தலில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பரிசில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் Matthew Fraser இடம் இது தொடர்பான கூறியுள்ளதாவது, இது மக்களின் கலாச்சாரம் தொடர்பானது.
அதாவது, பிரித்தானிய பூங்கா ஒன்றில் நீங்கள் உங்கள் நாயின் கழிவுகளை அங்கேயே விட்டுச் சென்றால் குறைந்தது ஒருவராவது கண்டனம் தெரிவிப்பார். ஆனால் பரிசில் மக்கள் அதை காண முடியாது. கடந்து செல்வதிலேயே குறியாக இருப்பார்கள், என தெரிவித்துள்ளார்.