தமிழ் சினிமாவில் 2017ம் ஆண்டு வெளியான படங்களில் நல்ல ஹிட்டடித்த படம் துப்பறிவாளன். விஷால், ஆக்ஷன் கிங் அர்ஜுன், சமந்தா என முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடந்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தில் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. 2.0 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர் சமீபத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திலும் பணிபுரிந்துள்ளார்.