ரஷ்ய கம்சற்கா (Kamchatka) எரிமலையில் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த எரிமலை வெடிப்பு, கடந்த வாரம் மத்திய கிழக்கில் ஏற்பட்ட நில அதிர்வுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை சரித்திர பூர்வமாக ஏற்றுக் கொள்ளலாம் என ரஷ்ய எரிமலை வெடிப்பு மீட்புக் குழுவின் தலைவர் ஓல்கா கிரினா உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நில அதிர்விற்கும் ரஷ்ய எரிமலை வெடிப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் என ஏனைய நாடுகளின் விஞ்ஞானிகளும் குறிப்பிட்டுள்ளனர்.







